ஜெயமோகன் ஆற்றிய கீதைப் பேருரை

நாம் எல்லோரும் பகவத் கீதையை படித்திருப்போம், அல்லது கர்ணன் படத்தில் வரும் கண்ணதாசனுடைய பாடல் வரிகளையாவது கேட்டுருப்போம். இந்த நவீன காலத்துக்கு பகவத் கீதையை எப்படி வாசிப்பது? பகவத்கீதை எவ்வளவு பழையது? மகாபாரத்தின் இடைச்செறுகலா? கிருஷ்ணன் உரைத்ததா? கீதைத்தருணம் என்றால் என்ன? கிழக்கு பதிப்பகம் குறுந்தகடாக வெளியுட்டுள்ளது. கண்டிப்பாக ஒரு திறப்பாக இருக்கும்.

அம்மா – தானியங்கி செய்தி

நேற்று மதியம் கைபேசி ஒலித்தது, உத்தர் பிரதேச எண், யாரு நம்ம கூப்பிடறாங்கன்னு கேட்டா, அம்மா!!! மழை, வெள்ளம், நிவாரணம், கொஞ்சம் அரசியல், சுயநலம் இல்லாதவள் இத்யாதி. வாட்ஸ்ஆப் போய், இப்போ தானியங்கி செய்தி வரைக்கும். புல் அரிக்குது இவங்க கரிசனம்.